நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்து காட்டிய சீனா…!!! அமெரிக்காவுக்கு நிகரான வெடிகுண்டு தாயை உருவாக்கிய சீனா…!!!
உலக நாடுகளில் உள்ள வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தாயாக அமெரிக்க இராணுவத்திடம் உள்ள ஜிபிய 43/பி என்ற வெடிகுண்டு உள்ளது. இந்த வெடிகுண்டுக்கு இணையாக ஒரு வெடிகுண்டை தயாரித்துள்ளது சீனா.
சீன இராணுவம் தயாரித்த வெடிகுண்டு :
இந்நிலையில் சீனா, அமெரிக்க இராணுவத்திற்கு போட்டியாக பெரிய வெடிகுண்டு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த வெடிகுண்டை உருவாக்கி சீனா எச்-6கே போர்விமானத்தில் இருந்து வீசி சோதித்துள்ளது. இந்த வெடிகுண்டு வெற்றிகரமாக விமானத்தில் இருந்து வெற்றிகரமாக வீசப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டின் சிறப்பு :
இது குறித்து சீன இராணுவ நிபுணர் வே.டோங்சு கூறுகையில், இந்த வெடிகுண்டின் நீளம் 5 முதல் 6 மீட்டர் உள்ளது என்றும், இது பெரிய கட்டடங்களையும், இராணுவ தலங்களையும் தரைமட்டமாக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அமெரிக்க குண்டாய் இராணுவ போர் சரக்கு விமானத்தில் தான் எடுத்து முடியும், ஆனால் சீன குண்டை இராணுவ போர்விமானத்திலேயே எடுத்து செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.