சீனாவின் உள்நாட்டு மொத்தம் உற்பத்தி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2020 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 6.8% குறைவு.
சீனாவில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா வைரசால் பெரும் இழப்பீடை சந்தித்து தற்போது அந்நாட்டில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, பின்னர் மூடப்பட்டிருந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் 84 சதவீதத்திற்கு மேல் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு மொத்தம் உற்பத்தி ஜிடிபி (Gross domestic product) வளர்ச்சி விகிதம் 2020 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 6.8 சவிகிதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளிவிவர பணியகம் தரவு கூறுகிறது. 1992க்கு பிறகு சீனாவில், முதல் காலாண்டில் இந்த அளவு ஜிடிபி குறைந்துள்ளது, இதுவே முதல் முறையாகும் என்று தெரிய வருகிறது.
சீனாவில் மொத்தம் உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 6.5 சவிகிதம் குறையும் என்று ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் கணிதத்தைவிட அதிக அளவு ஜிடிபி வளர்ச்சி விகிதம் சரிவை கண்டுள்ளது. இதற்கு முந்தைய 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை சீனாவில் பொருளாதாரம் 6 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது. இதனிடையே கொரோனாவால் சீனாவில் 82,692 பேர் பாதிக்கப்பட்டு, 4,632 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…