சீனா அரசு அதிரடி .! 10 நாள்களில் 25,000 சதுர மீட்டரில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை..!

Default Image
  • இன்று  கொரோனா வைரஸ் காய்ச்சலால் 13 பேர் பலியாகி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 1,500 பேருக்கு மேல் பாதிப்படைந்து உள்ளனர்.
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை கொடுக்க சீனா முடிவு செய்து ஒரு புதிய மருத்துவமனை கட்டி வருகிறது.

சீனாவில் “கொரனா வைரஸ்” காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் இருந்து பரவியது.தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த  வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சலால் நேற்று மட்டும் 15 பேர் இறந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. பலியானவர்கள் 50 வயது முதல் 87 வயதிற்குள்ளவர்கள் , அவர்களில் 11 பேர் ஆண்களும் , 4 பேர் பெண்களும் ஆவார்.  இதையெடுத்து இன்று  கொரோனா வைரஸ் காய்ச்சலால் 13 பேர் பலியாகி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 1,500 பேருக்கு மேல் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வூஹான் நகரில் ஒரு புதிய மருத்துவமனை கட்டப்பட்டு அந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை கொடுக்க சீனா முடிவு செய்து ஒரு புதிய மருத்துவமனை கட்டி வருகிறது.

இந்த மருத்துவமனைக்காக சுமார் 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகள் கொண்ட அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.இதற்கான கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.இன்னும் ஏழு நாள்களில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மருத்துவமனை கட்டும் பணியில் 35 குழி தோண்டும் இயந்திரங்கள் , சுமார் 7,000 பேர் பகலாக வேலை செய்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனையை ஏற்கெனவே தயார் நிலையில் உள்ள சுவர்களை கொண்டு கட்டி முடிக்க முடிவு செய்து உள்ளனர். இதனால் மருத்துவமனை எளிதாகவும் , குறைந்த செலவிலும்   கட்டலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2003-ம் ஆண்டு சீனாவில் சார்ஸ் வைரஸ் தாக்குதலின் போதும் அதிகபேர் பாதிக்கப்பட்டதால் பெய்ஜிங் நகரில் இதேபோன்று குறைந்த நாள்களில் ஒரு மருத்துவனை  கட்டப்பட்டது. அதை போன்று மீண்டும் ஒரே வாரத்தில் புதிய மருத்துவமனை கட்ட உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்