10 நாட்களில் 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்போகும் சீனா

Default Image

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நகரமான வுஹானில் அடுத்த 10 நாட்களில்  11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது  என அம்மாநில ஊடக அறிக்கை தெரிவிக்கிறது .

இந்த திட்டம் அதன் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் , வுஹானில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 10 நாட்களுக்குள் எவ்வாறு சோதனை செய்ய முடியும் என்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது .

வைரஸ் முதன்முதலில் வெளிவந்த வுஹானில் இந்த வார இறுதியில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு கொரோனா தொற்று இருப்பதாக பதிவாகவில்லை .வுஹானில் 11 வாரமாக  ஊரடங்கு பின்பற்றப்பட்டது அத பின்னர் ஏப்ரல் 8 ம் தேதிதான் அது தளர்த்தப்பட்டது .

பள்ளிகள் ,வணிக வளாகங்கள் ,பொதுப்போக்குவரத்து ஆகியவை திறக்கப்பட்டது வுஹான் தனது இயல்பான நிலைமைக்கு வருவதுபோல் இருந்தது.இந்நிலையில் கடந்த 1 வாரத்தில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றால் அடுத்தகட்ட பரவல் தொடங்கிவிடுமோ என்ற அச்சத்தில் பலவேறு முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்