நடுராத்திரியில் அறிக்கை..அத்துமீறும் சீனா!வெடிக்கும் கால்வான்
சீனா வெளியுறவு அமைச்சகம் ஆனது கால்வன் பள்ளத்தாக்கை மீண்டும் உரிமை கோரி நள்ளிரவில் அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
லடாக் கிழக்கில் கால்வன் பள்ளத்தாக்கு உள்ளது இந்த பகுதி முழுவதும் எங்களுக்கு தான் சொந்தம் என சீனா மீண்டும் உரிமை கோரி இந்தியாவுடன் மல்லுக்கு நிற்கிறது.
கால்வன் (கல்வான் அல்லது கல்வன்) இப்பள்ளத்தாக்குப் பகுதி இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ளது. ஆனால் இப்பகுதியை தற்போது சீனா திடீரென உரிமை கோரி அங்கு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.
பதற்றம் நிலவி அது மோதலாக மாறியது அந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.அதே போல் 43 சீனா வீரர்கள் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்டனர்.சீனாவின் அத்துமீறிய தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் கடும் கோபத்தில் உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக டெல்லியில் உள்ள சீனா தூதரகம் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை நள்ளிரவில் வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் ஜூன் 6-ந் தேதி இந்திய ராணுவ வீரர்களே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை தாண்டினார்கள் என்றும் மேலும் அவர்கள் தான் சீனா வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டி உள்ளது.
மேலும் தன் அறிக்கையில் கூறியுள்ள சீனா ஜூன் 15-ந் தேதியும் இந்திய ராணுவ வீரர்களே அத்துமீறி எங்கள் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் தான் இருதரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டதாக அதில் கூறியுள்ளது. அத்துடன் அந்த அறிக்கையில் ஒட்டுமொத்த கால்வன் பள்ளத்தாக்கு பகுதியுமே சீனாவுக்கே உரிமை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த பகுதியில் சீனா ராணுவத்தினர் பல ஆண்டுகாலமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் சீனா தன் அறிக்கையில் கூறியுள்ளது.நள்ளிரவில் சீனாவில் இருந்து பறக்கவிடப்பட்ட இந்த அறிக்கையானது நாட்டு மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.