சீனாவின் நிதியை உயர்த்துவது எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஆகாது?
சீனாவில் நாட்டின் பாதுகாப்புக்கு செலவிடும் நிதியை உயர்த்துவது எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஆகாது என சீனா தெரிவித்துள்ளது. சீனா எவ்வளவு நிதி ஒதுக்கும் என்பதை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய தொகையை பாதுகாப்புத்துறைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒதுக்கியுள்ளார். அதற்குப் போட்டியாக சீனா அதிகதொகை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை சீனாவில் பாதுகாப்புத்துறை ஒதுக்கீட்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப்படும் நிலையில் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஸங்க் யெசுய் (Zhang Yesui) செய்தியாளர்களைச் சந்தித்தார். சீனா அதிக நிதி ஒதுக்குவது எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையாது என விளக்கமளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.