சுரங்கத்தில் சிக்கிகொண்ட 30 ஊழியர்கள்-மீட்பு பணியில் 251 வீரர்கள்.!80 மணி நேர போராட்டம் 13 பேர் மீட்பு.!
- சீனாவில் உள்ள சான்மசு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென புகுந்த வெள்ள நீரால் 30 ஊழியர்கள் சிக்கி தவிப்பு
- மீட்பு பணியில் 251 வீரர்கள் ஈடுபட்டு 80 நேர போரட்டத்திற்கு பின் 13 பேர் உயிருடன் மீட்பு
சீன நாட்டில் தென்மேற்கே சிச்சுவான் மாகணத்தில் அமைந்து உள்ளது யிபின் நகரம் இந்த நகரில் சான்மசு என்கின்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது.இந்த சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திடீரென புகுந்த வெள்ள நீரால் சுரங்கத்தில் பணியில் இருந்த 30 ஊழியர்கள் மாட்டிக் கொண்டனர்.
இந்நிலையில் உள்ளே இருந்த ஊழியர்களில் 5 பேர் பலியாகி நிலையில் எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணியில் களமிரங்கிய அந்நாட்டு மீட்பு படையை சேர்ந்த 251 வீரர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
80 மணி நேர அயராத போராட்டத்திற்கு பிறகு சுரங்கத்தில் மாட்டி கொண்டிருந்தவர்களில் 13 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.மேலும் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.