அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று அந்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.இந்த நோய் காரணமாக சீனா கடும் உளைச்சலை சந்தித்து வருகிறது.அந்நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பால் 230 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டில் இருக்கக்கூடிய பிறநாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க மற்ற நாடுகள் நடவடிக்கை எடுத்து வரும் அதே நிலையில் கடும் உச்சக்கட்ட பரிசோதனைகள் அவர்களுக்கு நடத்தப்படுகிறது..இன்னும் சில நாடுகள் சுற்றுப்பயணிகள் மற்றும் சீனர்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடைவித்துவிட்டனர்.இந்தியா தரப்பில் சீனாவில் சிக்கி இருப்பவர்களை மீட்டு வருகிறது.
இந்நிலையில் உச்சக்கட்ட பரபரப்பாக காணப்படும் நிலையில் சீனாவில் இந்நோய் அதிக பகுதிகளில் வேகமாக பரவி வருகின்றது இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்நாட்டு அரசு மருத்துவமனை ஒன்றை கட்ட திட்டமிட்டது.அதன்படி மருத்துமனையையும் கட்டிமுடித்து விட்டதாக சீன செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 1000 படுக்கை வசதிகளை கொண்டது.மேலும் 1400 ராணுவ மருத்துவ அதிகாரிகளை இம்மருத்துவமனைக்கு அனுப்ப சீன அரசு உத்தரவிட்டது.
இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது.இந்த வீடியோவில் ஜன.,29,30,31 ஆகிய மூன்று நாட்களில் அசுர வேகத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட மாற்றத்தை காணமுடிகிறது.இவ்வாறு விறுவிறுப்பாக கட்டப்பட்ட இம்மருத்துவமனையானது நாளை முதல் செயல்பாட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மற்றொரு வீடியோவில் மிக விரைவாக மருத்துவமனையின் கட்டிப்பணிகள் நடைபெறுவதைக் காணலாம்.
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…