கொரோனாவால் சீர்குலைந்த சீனா…! இரவு- பகல் பார்க்காமல் அசுர வேகத்தில் கட்டி எழுப்பிய பிரம்மாண்ட மருத்துவமனை ..!

Default Image
  • சீனாவை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸால் அந்நாடே ஸ்தம்பித்து உள்ளது.
  • சீனாவை தொடர்ந்து உலகநாடுகளுக்கும் கொரனா வைரஸ் பரவுவதால்  உலக நாடுகளும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று அந்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.இந்த நோய் காரணமாக சீனா கடும் உளைச்சலை சந்தித்து வருகிறது.அந்நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பால்  230 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Image

இந்நிலையில் அந்நாட்டில் இருக்கக்கூடிய பிறநாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க மற்ற நாடுகள் நடவடிக்கை எடுத்து வரும் அதே நிலையில்  கடும் உச்சக்கட்ட பரிசோதனைகள் அவர்களுக்கு நடத்தப்படுகிறது..இன்னும் சில நாடுகள் சுற்றுப்பயணிகள் மற்றும் சீனர்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடைவித்துவிட்டனர்.இந்தியா தரப்பில் சீனாவில் சிக்கி இருப்பவர்களை மீட்டு வருகிறது.

இந்நிலையில் உச்சக்கட்ட பரபரப்பாக காணப்படும் நிலையில் சீனாவில் இந்நோய் அதிக பகுதிகளில் வேகமாக பரவி வருகின்றது இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்நாட்டு அரசு மருத்துவமனை ஒன்றை கட்ட திட்டமிட்டது.அதன்படி மருத்துமனையையும் கட்டிமுடித்து  விட்டதாக சீன செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.

image சீன அரசு இந்த மருத்துவமனையை வெறும் 7 நாட்களில் இரவு பகல் பாராமல் கட்டி முடித்துள்ளது.ஜன.,25 தேதி தொடங்கிய இந்த பணி அசுர வேகத்தில் கட்டி முடித்துள்ளது.

இவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 1000 படுக்கை வசதிகளை கொண்டது.மேலும் 1400 ராணுவ மருத்துவ அதிகாரிகளை இம்மருத்துவமனைக்கு அனுப்ப  சீன அரசு உத்தரவிட்டது.

image

இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது தொடர்பாக வீடியோ ஒன்று  வெளியாகி வைரல் ஆகியுள்ளது.இந்த வீடியோவில் ஜன.,29,30,31 ஆகிய மூன்று நாட்களில் அசுர வேகத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட மாற்றத்தை காணமுடிகிறது.இவ்வாறு விறுவிறுப்பாக கட்டப்பட்ட இம்மருத்துவமனையானது நாளை முதல் செயல்பாட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் மற்றொரு வீடியோவில் மிக விரைவாக மருத்துவமனையின் கட்டிப்பணிகள் நடைபெறுவதைக் காணலாம்.

https://twitter.com/globaltimesnews/status/1223836570031050753

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்