சீனாவில் உலகின் நீண்ட மின்பாதைத் அமைக்கும் பணி தீவிரம் !

Default Image

சீனாவில் உலகின் நீண்ட மின்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மஞ்சளாற்றின் இரு கரைகளிலும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுக் கம்பி வடங்களைக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சீனாவின் மேற்கில் உய்குர் என்னுமிடத்தில் இருந்து கிழக்கே அன்குய் வரை 3ஆயிரத்து 320கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயிரத்து நூறு கிலோவோல்ட் திறன் கொண்ட மின்னாற்றலைக் கடத்தும் மின்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். இதன் ஒரு கட்டமாக பையின் என்னுமிடத்தில் மஞ்சளாற்றின் இருகரைகளிலும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் இடையே மொத்தம் 70 டன் எடைகொண்ட 16 கம்பி வடங்கள் கட்டப்பட உள்ளன. முதல் 2 கம்பி வடங்களை வெற்றிகரமாக மின்கோபுரங்களில் கட்டி சாதனை படைத்துள்ளனர்.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்