உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை உள்ள காலகட்டத்தில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது என்ற செய்தி தற்போது வேளியாகியுள்ளது. சீனாவில் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்று கொள்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 2016-ம் ஆண்டு விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் அந்நாட்டின் மக்களிடையே எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இது குறித்து சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த மக்கள் தொகை நிபுணர் ஒருவர், நாட்டில் அன்றாட செலவிற்கான விலை அதிகரித்து வருவதும் அதிக வாழ்க்கைச் செலவு ஏறோடுவதாலும் பிறப்பு விகிதம் வெகுவாக குறைய காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்.
கடந்த 1970ம் ஆண்டுகளில் ஒரு பெண்ணிற்கு சராசரியாக பிறப்பு விகிதம் 5.9 என்ற நிலையில் இருந்தது. அதே சமயம் கடந்த 1990 களில் 1.6 ஆக குறைந்தது. தற்போதைய நிலையில் குறைந்து வரும் பிறப்பு விகித்தை கணக்கில் கொண்டால் வரும் 2050 களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அளவிற்கு கடுமையாக குறையும் எனவும், நாட்டில் மக்கள் தொகை பிரச்னை என்பது மெதுவான மற்றும் நீண்ட கால பிரச்னை என்றும் அவர் கூறி உள்ளார். இந்த தகவல் சீனாவின் தொழிலாளர் சக்தி என்பது இனிவரும் காலங்களில் குறைந்து போகும் என்ற கருத்தை தெரிவிக்கின்றன என எடுத்துக்கொள்ளலாம்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…