சீனாவில் குறைந்து வரும் பிறப்பு சதவீதம்… தொழிலாளர் சக்தியில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்… அச்சத்தில் சீனா..

Default Image
  • உலக மக்கள் தொகையில் முதல் நாட்டில் மக்கள் தொகை வெகுவாக  குறைந்தது.
  • தொழிலாளர் சக்தியும் குறைந்து உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்.

உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை உள்ள  காலகட்டத்தில் பிறப்பு விகிதம் வெகுவாக  குறைந்து வருகிறது என்ற செய்தி தற்போது வேளியாகியுள்ளது. சீனாவில் இரண்டு குழந்தைகள் மட்டுமே  பெற்று கொள்வதற்காக  விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 2016-ம் ஆண்டு விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் அந்நாட்டின் மக்களிடையே எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இது குறித்து சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த மக்கள் தொகை நிபுணர் ஒருவர்,  நாட்டில் அன்றாட  செலவிற்கான விலை அதிகரித்து வருவதும் அதிக வாழ்க்கைச் செலவு ஏறோடுவதாலும் பிறப்பு விகிதம் வெகுவாக  குறைய காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்.

Image result for china baby

கடந்த 1970ம் ஆண்டுகளில் ஒரு பெண்ணிற்கு சராசரியாக பிறப்பு விகிதம் 5.9 என்ற நிலையில் இருந்தது. அதே சமயம்  கடந்த 1990 களில் 1.6 ஆக குறைந்தது. தற்போதைய நிலையில் குறைந்து வரும் பிறப்பு விகித்தை கணக்கில் கொண்டால் வரும் 2050 களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அளவிற்கு கடுமையாக குறையும் எனவும், நாட்டில் மக்கள் தொகை பிரச்னை என்பது மெதுவான மற்றும் நீண்ட கால பிரச்னை என்றும் அவர் கூறி உள்ளார். இந்த தகவல் சீனாவின் தொழிலாளர் சக்தி என்பது இனிவரும் காலங்களில் குறைந்து போகும் என்ற கருத்தை தெரிவிக்கின்றன என எடுத்துக்கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்