“கொரோனா எவ்வாறு பரவியது?” ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகளை சீனாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை!

கொரோனா எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு சீனா புறப்படவுள்ள நிலையில், அவர்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சினாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கொரோனா பரவல் குறைய தொடங்கியது. சில நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கியதை தொடர்ந்து, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்தது. தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான கொரோனா பரவத் தொடங்கியது.
மேலும், கொரோனா பரவலுக்கான காரணம் குறித்து உலக சுகாதார அமைப்பு, ஜனவரி மாதம் சீனாவில் ஆய்வு நடத்தவுள்ளதாகவும், அதற்காக பிரத்தேயகமாக குழு ஒன்றினை உருவாகியுள்ளதாகவும், அந்த குழு கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது? எப்படி உருவானது? உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தவுள்ளதாக அண்மையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி, இந்த ஆய்விற்கு சீன அரசு அனுமதி வழங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் சீனா புறப்படுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகளை சீனாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும், சீனாவுக்குள் நுழைய விசா வழங்காமல் அந்நாட்டு அரசு தாமதித்து வருகிறதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025