பி.பி.சி.க்கு தடை விதித்தது சீனா.!

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியதாக உலக நாடுகள் அனைத்தும் குற்றம் சாட்டிய நிலையில், சீனா அதிபர் குறித்தும், கொரனோ வைரஸ் பரவலை சீன கையாண்ட விதம் குறித்தும் பிசிசி வேர்ல்டு தவறான செய்தி வெளியிட்டதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதனால், சீனாவில் அடுத்த ஓராண்டிற்கு பிசிசி வேர்ல்டு செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்ப ஜி ஜின்பிங் அரசு தடை விதித்தது. பிபிசி வேர்ல்டு சேனலில் ஒளிபரப்பு செய்த செய்திகள் உண்மைக்குப் புறம்பாக உள்ளது. செய்திகள் அனைத்தும் விதிமுறைகளை மீறியுள்ளது. எனவே, சீனாவில் ஒளிபரப்பு செய்யும் வெளிநாட்டு சேனல்களின் தகுதியை பிபிசி இழந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பிரிட்டன் தொலைத் தொடர்பு அமைச்சகம் சீனாவின் அரசு தொலைக்காட்சியான CGTN-ன் உரிமத்தை ரத்து செய்தனர். அந்தச் செயலுக்கு பதிலடியாக தான் சீனா இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025