ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவித்த சீனா
காபூலைக் கைப்பற்றிய 22 நாட்களுக்குப் பிறகு தலிபான்கள் தங்கள் அரசாங்கத்தை அறிவித்தனர். ஆப்கானிஸ்தானில் புதிய பிரதமராக தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார். துணைத் தலைவராக முல்லா அப்துல் கனி பரதார் மற்றும் முல்லா அப்துல் சலாம் இருப்பார்கள் என்று தலிபான்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் சீனா மற்றும் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தலிபான் அரசுக்கு ஆதரவாக சீனா தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானுக்கு ஒரு பெரிய உதவியை சீனா அறிவித்துள்ளது. அதன்படி, உணவு தானியங்கள், குளிர்கால பொருட்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி உட்பட ஆப்கானிஸ்தானுக்கு 200 மில்லியன் யுவான் (அமெரிக்க டாலர் 31 மில்லியன்) உதவி வழங்குவதாக சீனா நேற்று அறிவித்தது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆக்கிரமிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா விலகுவதாக அறிவித்த பிறகு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஆப்கானிஸ்தான் தலிபான் அரசியல் ஆணையத்தின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதரை சந்தித்தார். அதன்பிறகு, சீனா தலிபான்களுடன் நெருங்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானுக்கு சீனா வழங்கும் முதல் உதவி இது என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் ஒழுங்கை மீட்க தலிபான்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் சீனா கூறியுள்ளது. மறுபுறம் தலிபான்களுக்கு ஒரு பெரிய நாட்டின் ஆதரவு தேவை. இதனால், சீன வெளியுறவு அமைச்சர்களுடன் தலிபான் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அமைவதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று சீனா கூறியது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…