கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவன குழுவின் அங்கமாக இருக்கும், அமெரிக்க வல்லுநர்களையும் அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால், தொழில், வர்த்தகம் பாதிக்கப்பட்டு பங்குசந்தைகளின் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனிடையே சீன தொடர்பாக தேவையற்ற பயண கட்டுப்பாடுகளை முதலில் விதித்தது. பின்னர் தங்கள் நாட்டில் இருப்பவரை முதன் முதலில் மீட்டு சென்றது ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி பரப்புவதாக சீன அரசு குற்றம்சாட்டத்தினர்.
இந்நிலையில், கொரானா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்யவும், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், உலக சுகாதார நிறுவனத்தின் குழு சீனா செல்கிறது. இந்த குழுவில் அமெரிக்க வல்லுநர்கள் இடம்பெறுவதாகவும், இதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை கொரோனா வைரஸ் பெய்ஜிங், ஷாங்காய், ஹூபே போன்ற பல நகரங்களில் பரவுள்ளது. கொரோனா வைரசால் பலியானோர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…