சீனா அதிரடி அறிவிப்பு..!
அமெரிக்கா உடனான வர்த்தகப் போரை கைவிடுவதாக அறிவித்துள்ள சீனா, இறக்குமதி வரிகளையும் ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய மதிப்பில் மேலும் சுமார் ஆறரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 128 பொருட்களுக்கு 28 சதவீத வரியை விதித்து சீனா பதிலடி கொடுத்தது.
இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்படாத வர்த்தகப் போர் உருவானது. இந்நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தகப் போரை கைவிடுவதாக, சீனாவின் துணை பிரதமர் லியூ கி ((Liu He)) அறிவித்துள்ளார். இருநாட்களுக்கு முன்பு வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, லியூ கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.