தன்னை வளர்த்தவரையே சீனாவில் கொன்று தின்ற புலி….
தன்னை வளர்த்தவரையே புலி கொன்று தின்ற சம்பவம் சீனாவில் உயிரியல் பூங்காவில், நிகழ்ந்துள்ளது. ஃப்ஜீயான் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் வூ என்பவர் பணியாற்றி வந்தார். 4 ஆண்டுகளுக்கு முன் குட்டியாக வந்த புலி ஒன்றை அவர் பூங்காவில் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
நேற்று வழக்கம் போல் புலியின் கூண்டுக்குள் சென்று சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக அவரை அங்கிருந்த புலி தாக்கியது. இதனைப் பார்த்த சுற்றுலா பயணிகளும், பூங்கா பணியாளர்களும் புலியை விரட்ட முயன்றனர். ஆனால் அனைவரும் பார்த்துக் கொண்ருந்த போதே வூவை கொன்ற அந்தப் புலி அவர் உடலில் சில பாகங்களை தின்று விட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.