சீனாவில் நஞ்சங் பகுதியில் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியின் மேற்கூரை இடிந்தது!
சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரைப் பகுதி, சீனாவில் ஜியாங்க்ஸி (Jiangxi) மாகாண தலைநகரான நஞ்சங்-ல் (Nanchang) உடைந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
வருகைப் பகுதியின் 2வது கதவருகே பலத்த காற்று காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்தது. ஆனால், அச்சமயம் அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அதன் கீழ் நின்றிருந்த கார்கள் சேதமடைந்தன.
1999-ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த விமான நிலையம், நொடிக்கு 30 மீட்டர் என வீசிய பலத்த காற்றால் சேதமடைந்ததாகவும், சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதாகவும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.