சீனாவில் ராணுவத்துக்கான நிதி இந்திய ராணுவத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகம்!
11 லட்சம் கோடி ரூபாயாக சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்துக்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது.சீனாவின் பொருளாதார வளர்ச்சி உற்பத்தி துறையில் தேக்கம் காரணமாக வீழ்ந்த வண்ணமே உள்ளது.
இந்த ஆண்டு இந்த விகிதம் 6.5 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சீன ராணுவத்தை நவீனமயமாக்கும் பொருட்டு, 2018ஆம் ஆண்டு ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி 8.1 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்ற தொடக்க கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி சீன ராணுவத்துக்கான நிதி இந்திய மதிப்பின் படி 11 லட்சத்து 39ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும். இது இந்திய ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.