சீனாவில் வினோதமான திருட்டு!ரோட்டை திருடிய திருடன் ….
முக்கால் கிலோ மீட்டர் தூர சாலையை சீனாவின் திருடன் ஒருவன் ஒரே நாள் இரவில் பெயர்த்தெடுத்து விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சங்கேசு என்ற கிராமத்தில் போடப்பட்டிருந்த சுமார் 800 மீட்டர் தூர சாலை ஒரே நாள் நள்ளிரவில் மாயமானது. அதில் போடப்பட்டிருந்த கான்கிரீட் மொத்தமாக பெயர்த்தெடுக்கப்பட்டிருந்ததை அடுத்து, தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் ஷிகு (Zhu) என்ற இளைஞனை கைது செய்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சாலையை தோண்டும் வாகனத்தை வாடகைக்கு எடுத்து, கான்கிரீட் கலவையை பெயர்த்தெடுத்ததாகவும், அதை அப்பகுதியில் உள்ள கான்கிரீட் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு விற்றதும் தெரியவந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.