மொறு மொறு வெங்காய ரிங்க்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா
வெங்காயம ரிங்க்ஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று. இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.
- மொறு மொறு வெங்காய ரிங்க்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா?
மொறு மொறு வெங்காய ரிங்க்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – சிறிதளவு
வெங்காயம் – 2
எண்ணெய் – தேவைகேற்ப
பிரட் கிராம்ஸ் – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தை வட்டமாக வெட்டி எடுத்து கொள்ளவும். அதற்கு பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து மைதா மாவு, சோள மாவு, இஞ்சி, பூண்டு விழுது, மிளகு தூள், உப்பு, பேக்கிங் சோடா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயத்தை கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து, பிரட் கிராம்சில் பிரட்டி எண்ணெய்யில் போட்டு நன்கு பொறித்து எடுக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும்.இப்போது சூடான மொறு மொறு வெங்காய ரிங்க்ஸ் தயார்.