நாடு முழுவதும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம்…!
ஒவ்வொருவருக்கும் குழந்தைப்பருவம் என்பது மறக்கமுடியாத பருவம். 90 வயது பெரியவரானாலும், தான் ஐந்து வயதில் செய்ததை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார். எதையும் துருவிப் பார்க்கிற பருவம் குழுந்தைப் பருவம். பின் விளைவுகளைப் பற்றி அறியாத, கவலைப்படாத செயல்களைச் செய்யும் பருவம். எதைப்பார்த்தாலும் ஏன் எப்படி என்று கேள்வியெழுப்பும் பருவம். தியேட்டரில் படம் பார்த்தால், நடிகர்கள் எப்படி திரைக்குப் பின்னால் ஓயாமல் தினமும் மூன்று காட்சிகள் நடிக்கிறார்கள் என்று கேட்கும் பருவம் ஆகும்.
இந்நிலையில் குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் .அதேபோல் இந்த ஆண்டும் இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாட உள்ளது குழந்தைகள் தினம்.