பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர்.
தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வில் பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர் என தெரியவந்துள்ளது. குழந்தைகளிடம் ‘வைரஸ் சுமை’ அதிகம் இருப்பதால்தான் பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரசை வேகமாக பரப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் சுமை என்பது ஒருவரிடம் உள்ள வைரஸின் அளவை குறிக்கிறது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் குறைவான குழந்தைகள் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை கொன்றிடுந்தாலும், வயதான குழந்தைகள் மற்றும் பெரியவர்களை விட மூக்கு மற்றும் தொண்டையில் 10 முதல் 100 மடங்கு அதிக வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள் பார்க்கும்போது 2 காரணங்களுக்காக குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒன்று, தொற்று நோய்க்கான ஆபத்து அதிகமாக உள்ளது. இரண்டு குழந்தைகள் அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே குழந்தைகளுக்கு சீக்கிரமாக தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தான் இதற்கு தீர்வாக அமையும்.
வயது வந்தவர்களுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசியை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்றால் அதற்கு பதில் ஆம் என்றுதான் சொல்லமுடியும். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி மருந்தின் அளவை குறைத்து சரியான முறையில் கொடுக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை பைசர் மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. குழந்தைகளுக்கு எந்த அளவு தடுப்பூசி எவ்வளவு கொடுத்தால் பாதுகாப்பானது என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெவ்வேறு வயதுடைய குழந்தைகளுக்கு அவர்களின் உடலின் தன்மையைப் பொறுத்து தடுப்பூசியின் அளவு மாறுபடும் என்றும் தெரிவிக்கின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…