கொரோனா வைரஸை பெரியவர்களை விட, குழந்தைகள் தான் வேகமாக பரப்புகின்றனர்…! ஆய்வில் வெளியான தகவல்…!

Default Image

பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர்.

தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வில் பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர் என தெரியவந்துள்ளது. குழந்தைகளிடம் ‘வைரஸ் சுமை’ அதிகம் இருப்பதால்தான் பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரசை வேகமாக பரப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் சுமை என்பது ஒருவரிடம் உள்ள வைரஸின் அளவை குறிக்கிறது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் குறைவான குழந்தைகள் லேசான மற்றும் மிதமான  அறிகுறிகளை கொன்றிடுந்தாலும், வயதான குழந்தைகள் மற்றும் பெரியவர்களை விட மூக்கு மற்றும் தொண்டையில் 10 முதல் 100 மடங்கு அதிக வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் பார்க்கும்போது 2 காரணங்களுக்காக குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒன்று, தொற்று நோய்க்கான ஆபத்து அதிகமாக உள்ளது. இரண்டு குழந்தைகள் அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே குழந்தைகளுக்கு சீக்கிரமாக தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தான் இதற்கு தீர்வாக அமையும்.

வயது வந்தவர்களுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசியை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்றால் அதற்கு பதில் ஆம் என்றுதான் சொல்லமுடியும். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி மருந்தின் அளவை குறைத்து சரியான முறையில் கொடுக்கவேண்டும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை பைசர் மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. குழந்தைகளுக்கு எந்த அளவு தடுப்பூசி எவ்வளவு கொடுத்தால் பாதுகாப்பானது என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெவ்வேறு வயதுடைய குழந்தைகளுக்கு அவர்களின் உடலின் தன்மையைப் பொறுத்து தடுப்பூசியின் அளவு மாறுபடும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்