“4 வயது குழந்தை”யை தெய்வமாக வணங்கும் நேபாளம்..!விநோதம்…!!
நேபாள நாட்டில் 4 வயது குழந்தை தெய்வமாக வழிபடப்பட்டு கொண்டாடும் இந்திர ஜாத்ரா திருவிழாவின்போது மக்களுக்கு காட்சியளித்தார்.
4 வயது த்ரிஷ்ணா ஷாக்யா (Trishna Shakya) என்ற அந்தக் குழந்தை, நேபாள நாட்டு இந்துக்களின் மரபுப்படி கடந்த 2017 ஆண்டு தெய்வமாக தேர்வு செய்யப்பட்டார். த்ரிஷ்ணா ஷாக்யா என்ற பெயருக்கு பதில் குமாரி என்ற பெயரில் அந்தக் குழந்தையை இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
அக்குழந்தை தேர்வான நாளிலிருந்து நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள அரண்மனைக்குள்ளேயே வைத்து அக்குழந்தையை பராமரிக்கப்பட்டு வருகிறார்கள் . இந்நிலையில், தற்போது நேபாளத்தில் நடைபெற்று வரும் இந்திர ஜாத்ரா திருவிழாவின் ஒரு பகுதியாக ( Indra Jatra festival), குழந்தை த்ரிஷ்ணா ஷாக்யா மக்கள் முன் காட்சியளித்தார்.
இந்நிலையில் நேபாள நாட்டின் பாரம்பரியத்துடன் அலங்கரிக்கப்பட்ட 4 வயது குழந்தை தெய்வத்தை, துப்பாக்கி ஏந்திய வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புடன் அரண்மனை ஊழியர்கள் தங்கள் தோளில்சுமந்து வந்தனர்.
தெய்வமாக தேர்வான அக்குழந்தை த்ரிஷ்ணா முதல்முறை அரண்மனையை விட்டு வெளியேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU