முதல்வர் பயணம் – நெல்லையில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தென்மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த கள ஆய்வு பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
ட்ரோன்கள் பறக்க தடை
இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கவுள்ளார்.
மேலும், நாகர்கோவிலில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் சாலை மார்க்கமாக பயணிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.