விஜயபாஸ்கரை ஆதரித்து, விராலிமலையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்.!

விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார்.
பொங்கலுக்கு ரூ.2,000 ரொக்கம் கொடுத்தது அதிமுக அரசுதான். திமுக ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தார்கள், ஒரு ரூபாய் கூட வழங்கியதாக சரித்திரம் கிடையாது என விமர்சித்தார். விராலிமலை தொகுதியில் அம்மா மின் க்ளினிக் 79 அமைக்கப்பட்டதாக கூறிய, இதுபோன்று இப்பகுதில் மட்டும் பல்வேறு நன்மைகள் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்றும் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பை அதிகரிக்க அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025