முதலாம் ஆண்டு நிறைவு செய்த கல்வித் தொலைக்காட்சிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து.!

Published by
கெளதம்

2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கல்வித் தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கல்விச் செல்வம் காலத்தால் அழியாதது. அந்தச் செல்வம் நாட்டிலே பாறைக்கடியிலே சுரங்கத்திலிருக்கும் தங்கக் கட்டிகளாக இருக்கக்கூடாது அதை எடுத்துப் பயன்படுத்திப் பளபளப்புள்ள, நல்ல ஒளி உள்ள தங்கமாக ஆக்கவேண்டும்” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். எனது தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசு, பேரறிஞர் அண்ணா அவர்களின் அமுத மொழிகள் செயல்வடிவம் கொடுக்கும் பணியினை அர்ப்பணிப்போடு செய்து வருகிறது.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்பதை தாரக மந்திரமாக கொண்ட மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ஏழை, எளிய மாணவ மாணவியர் கல்வி அறிவை பெறவேண்டும் என்பதற்காக, இந்தியாவில் எந்த மாநிலமும் சாதித்திராத அளவிற்கு கட்டணமில்லா கல்வியுடன் கூடிய விலையில்லா பாடப்புத்தகங்கள், ரோட்டுப் பக்ககங்கள் நீரோடைகள் காலணிகள் பக்கப்பட்டி மடிக்கணினி மிதிவண்டி, ஊக்கத் தொகை என பல்வேறு சலுகைகளை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்க உத்தரவிட்டு, நடைமுறைப்படுத்தினார்கள். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ஆம் நாள், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கற்றல் கற்பித்தல் என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, 2019-2020 ஆம் கல்வியாண்டின் இறுதிவரை அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் சார்ந்த பகுதிகள் குறைவான கால அளவில் வீடியோ பதிவுகளாக எடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.

இந்தச் சூழ்நிலையில், மனிதகுலம் இதுவரை சந்தித்திராத கொரோனா என்னும் கொடும் தொற்றுநோய் உலகத்தையே முடக்கிப் போட்டதன் காரணமாக புதிய கல்வி ஆண்டு தொடங்குவது என்பது மிகப் பெரும் சவாலாக இருந்தபோதிலும், இந்தச் சவாலை எதிர்கொண்டு, இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில், மாணவர்கள் தங்கள் கற்றலை தங்கள் இல்லங்களிலிருந்தே தங்கு தடையின்றி பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சி மாற்றி அமைக்கப்பட்டு பள்ளிகளுக்கான பாட அட்டவணைப் போன்று கல்வித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு அட்டவணை, வகுப்பு வாரியாக, பாட வாரியாக, வார நாட்களுக்கு தயாரிக்கப்பட்டு இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பாடப்பதிவுகள் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது இவ்வகையில் தயாரிக்கப்பட்ட அனைத்து வீடியோ பாடப் பகுதிகளிலும் QR Code விரைவுக்குறியீடு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வடிவில் தயாரிக்கப்பட்ட பாடங்களை கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியை நான் 14.7.2020 அன்று தொடங்கி வைத்தேன். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக 11 தனியார் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளிலும், Airtel DTH-லும் கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் நாள் பார்க்கத் தவறியவர்கள், மறுநாள் முதல் கல்வித் தொலைக்காட்சியின் YouTube Channel வழியாக பாடங்கள், படித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அட்டவணை மற்றும் இதர தகவல்கள் கல்வித் தொலைக்காட்சியின் இணைய தளத்திலும் கிடைக்கிறது. 1 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பமாகும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

11 hours ago

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…

12 hours ago

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…

13 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

15 hours ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

15 hours ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

16 hours ago