" அரசியல் வியாபாரி" "பச்சோந்தி" செந்தில் பாலாஜியை விமர்சித்த தமிழக முதல்வர்…!!
திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜியை ஒரு அரசியல் வியாபாரி , கொள்கை பிடிப்பில்லாதவர் , ஒரு பச்சோந்தி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் சுமார் 3000-ற்கும் மேற்பட்டோர் இணையும் இணைப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த இணைப்பு விழாவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைய வந்தவர்களை வரவேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் , நான் 1974ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இணைந்து கட்சிக்கு உண்மையாக பாடுபட்டதால் எனக்கு இன்று இந்த முகவரி கிடைத்துள்ளது.அதிமுக கட்சியை என்றுமே தொண்டர்கள் தான் ஆளுகின்றார்கள்.அதிமுகவில் உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , செந்தில்பாலாஜியை பற்றி கடுமையாக விமர்சித்தார்.அப்போது , செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்றும், அவர் கொள்கை பிடிப்பில்லாதவர், பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர் என்று திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியை தமிழக முதல்வர் கடுமையாக விமர்சித்தார்.