நீட் தேர்வு ரத்து செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துணிந்து சட்டம் இயற்ற வேண்டும் –
நீட் தேர்வு வேண்டாம் என்ற தடை சட்டத்தை இன்றைய முதல்வர், கலைஞரின் அரசியல் வாரிசு தளபதி ஸ்டாலின் அவர்கள் துணிந்து சட்டம் இயற்ற வேண்டும்.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பமும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 2007-ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வு கூடாது என்று தடைச்சட்டம் கொண்டுவந்த அரசு திமுக அரசு. அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் துணிவாக அந்த சட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினார்.
அதேபோல நீட் தேர்வு வேண்டாம் என்ற தடை சட்டத்தை இன்றைய முதல்வர், கலைஞரின் அரசியல் வாரிசு, தளபதி ஸ்டாலின் அவர்கள் துணிந்து சட்டம் இயற்ற வேண்டும். நீட் தேர்வை விலக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களை காத்திட வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.