உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க சோயா பீன்ஸ் சுண்டல்..!
நம் வாழ்வில் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களிலும் , துரித உணவுகளை உண்ணும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து விடுகின்றன. அதனை எளிதில் கரையக்கூடிய சோயாபீன்ஸ் சுண்டல் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
- வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ்-அரை கப்
- துருவிய தேங்காய் -3 மேசைக்கரண்டி
- உப்பு -தேவையான அளவு
- எண்ணெய் -அரை தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு -ஒரு தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் -இரண்டு சிட்டிகை
- கறிவேப்பிலை -ஒரு கொத்து
செய்முறை:
சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பின்னர் மறுநாள் சோயா பீன்ஸ் உள்ள தண்ணீரை வடித்து விட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து , தேவையான அளவு உப்பு கலந்து 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வேகவைத்து வைத்த சோயா பீன்ஸை தண்ணீர் வடித்து சேர்க்கவும், ஓரிரு நிமிடங்களில் வதங்கிய பின் துருவிய தேங்காயை சேர்த்து இறக்கவும் பின்னர் சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் தயார்.