சிக்கன் 65 வீட்டிலேயே செய்யலாம் – கடையை மிஞ்சும் சுவைக்கு இப்படி செய்து பாருங்கள்!
கோழிக்கறியை குழம்பு செய்து சாப்பிடுவதை விட, அதை பொரித்து சாப்பிடுவதை விரும்புபவர்கள் பலர். இதனால் வீட்டில் சுவையாக செய்ய முடியாது என்பதற்காக கடையில் சென்று 65 என்ற பெயரில் விற்கப்படும் கோழி கறியை வாங்கி ருசித்து சாப்பிடும் நமது மக்கள் இதை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இன்னும் தெரியாமல் இருக்கிறார்கள். வாருங்கள் இன்று தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன்
- இஞ்சி
- வெள்ளைப் பூண்டு
- சீரகத்தூள்
- மிளகாய்த்தூள்
- சிக்கன் பொரிக்கும் தூள்
- கடலை மாவு
- சோள மாவு
செய்முறை
முதலில் சிக்கனை கழுவி எடுத்துக் கொண்டு அதனுள் இஞ்சி வெள்ளைப்பூண்டு அரைத்த கலவையை சேர்த்து முதலில் பிரட்டி ஊற வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து, கான்பிளவர் மாவு மற்றும் சற்று கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்.
பின் அனைத்தையும் நன்றாக கலக்கி சற்று சிக்கன் மசாலா தூள் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து 5 நிமிடம் ஊற விடவும். அதன் பின்பு கடாயில் எண்ணை ஊற்றி பொரித்து எடுத்தால் அட்டகாசமான சிக்கன் 65 தயார். கடைகளில் வாங்குவதை விட வீட்டில் அதைவிட சுவையாகவும் நிறைவாகவும் சாப்பிடலாம்.