இந்த இரண்டு மாவட்டங்களில் ஹீரோ – ஹோண்டா வாகன விற்பனைக்கு தடை!

Default Image

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மற்றும் காரியாபண்ட் ஆகிய மாவட்டங்களில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில், பைக்குகள் என்றாலே நமக்கு நியாபகம் வருவது, ஹீரோ ஹோண்டா பைக்குகள் தான். இந்த இரண்டு நிறுவனங்கள், ஒன்றிணைந்து இந்தியாவில் தங்களின் பைக்குகளை விற்பனை செய்து வந்தனர். ஆனால் சில காரணங்கள் காரணமாக இவ்விரண்டு நிறுவனங்கள் தனியாக செயல்பட்டு வருகின்றது. ஆயினும், இவ்விரண்டு பைக்குகளுக்கும் மக்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநில போக்குவரத்து பிரிவு, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் தயாரித்த இரு சக்கர வாகனங்களை சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மற்றும் காரியாபண்ட் மாவட்டங்களில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. பிஎஸ் 6 மாடல்களை விற்பனை செய்வதற்கு டீலர்ஷிப் ஒப்புதல் அளிக்காததால், இந்த மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் மாநில போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.

இந்த இரண்டு மாவட்டங்களில் மொத்தம் எட்டு வாகன டீலர்கள் இருப்பதாகவும், இந்த ஷோரூமில் வாகனங்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளன. அதில் நான்கு ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் நான்கு ஹோண்டா ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்