நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகள்.!தங்க வைத்து உணவு வழங்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்.!
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கோவளம் பகுதி மக்களை நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் முலம் தங்க வைத்து உணவு வழங்கி உதவியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வில்லனாகவும்,துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக திகழ்பவர்.சினிமாவில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரியல் ஹீரோவாக வலம் வருகிறார் .ஆம் பல ஏழை எளிய மக்களுக்கு உதவும் இவர் தற்போது நிவர் புயலால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தனது பவுண்டேஷன் மூலம் தங்க வைத்து உணவு வழங்கி உதவியுள்ளார்.
நிவர் புயலானது இன்று அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது .அதன் முன்னதாக நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகள் உட்பட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
அந்த வகையில் சென்னையில் உள்ள கோவளத்தின் கடலோர பகுதியில் வசிக்கும் மக்களை நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் முலம் தங்க வைத்து உணவு வழங்கி உதவி செய்துள்ளார்.அதற்கான புகைப்படங்களையும் , வீடியோக்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரகாஷ் ராஜ்,என்னை சுற்றியிருக்கும் ஒரு சிலராவது தூங்குகிறார்கள் என்று உறுதி செய்த பின்னர் ,இப்போது தான் என்னால் தூங்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே கொரோனா சூழலில் பல ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதிகள் வழங்கி உதவியதுடன்,இலவச கழிப்பிடங்களை பள்ளிகளுக்கு செய்து கொடுத்தும் , பட்டியலின மாணவியை வெளிநாட்டில் அனுப்பி படிக்க வைத்து அனைத்து செலவுகளையும் ஏற்று கொண்டது என பல உதவிகளை தனது பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் முலம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
#NivarCyclon .. Now I can sleep .. after ensuring at least a few people around me can sleep .. ???????? pls share whatever u can offered .. #justasking pic.twitter.com/5kuBLHI51P
— Prakash Raj (@prakashraaj) November 25, 2020
#NivarCylone as the cyclone is about to strike ..we are on the field …empowering the local team of youngsters #scopeenterprise led by Sundar in my neighbourhood #kovalam .. a #prakashrajfoundation initiative.. blessed to be able to cherish the joy of “giving back to life “ ???????????????? pic.twitter.com/dNRaI5I4EL
— Prakash Raj (@prakashraaj) November 25, 2020