அத்தியாவசிய பணிகளுக்கான பாஸ் மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது மே மாதம் 3ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று காலை அறிவித்தார்.
ஏற்கனவே ஊரடங்கின் போது விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் தொடரும் எனவும் அறிவித்திருந்தார். அத்தியாவசிய கடைகளான, மருந்தகம், உணவகங்கள் (பார்சல் மட்டும்) , மளிகை, காய்கறி கடைகள் என விதிமுறைகளுக்குட்பட்டு இயங்கின.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியானது, வங்கி, ஊழியர்கள், உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு வேலைக்கு செல்ல சிறப்பு பாஸ் கொடுக்கப்பட்டு பாஸ் வழங்கப்பட்டிருந்தது.
இந்த பாஸ் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அந்த பாஸ் வரும் மே 3ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.