சென்னை மினி கிளினிக்.. வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

சென்னையில் இயங்கும் மினி கிளினிக்கில் பணியாற்ற மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகிய பணிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன. அதில், மருத்துவர் பணிக்கு 200, செவிலியர் பணிக்கு 200, மருத்துவப் பணியாளர் பணிக்கு 200 காலியிடங்கள் உள்ளன. வயது வரம்பு அதிகப்பட்சமாக 40 வயது இருக்கவேண்டும். ஊதியம் ரூ.6,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படள்ளது.
இந்த பணிகளுக்கு சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமாக பணி எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தம் செய்யப்படாது என நிபந்தனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதி மாலை 5-மணிக்குள் பணிக்கு விண்ணப்பிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.