அண்ணாத்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடைத்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்ணன் – தங்கை உறவை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் தீபாவளி அன்று நவ.4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டைட்டில் பாடல், சாரல் காற்றே, மருதாணி, வா சாமி ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுயிருந்தது.

இதையயடுத்து, சமீபத்தில் அண்ணாத்த படத்தின் ட்ரெய்லரை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டியிருந்தது. இந்தப் படத்தின் டீசர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ரஜினி, ஊராட்சித் தலைவராக நடிப்பதாகக் கூறப்படும் நிலையில் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளிவர உள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணையதள நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்ட விரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகவும், அப்படி வெளியானால் பெரியளவில் நஷ்டம் ஏற்படும் எனவும் கூறி, சட்டவிரோதமாக இணையதளங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்கக் வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் வழக்கு தொடுத்திருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்