கொரோனா சிகிச்சை தொடர்பாக வீடியோவினை வெளியிட்ட பிரபல டிவி நடிகர் வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டிவி நடிகர் மற்றும் பத்திரிகையாளரான வரதராஜன் குற்றம் சாற்றினார். இந்நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறியதாவது, டிவி நடிகர், பத்திரிகையாளரான வரதராஜன், அரசுக்கு எதிராக தவறான தகவலை அளித்துள்ளார். அவர் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…