பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்பொழுது வீட்டிற்கு சென்றுள்ள ரம்யாவிற்கு தெரு முழுவதும் மேளம் கொட்டி ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டு உள்ளது, இதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் அவர்களால் தொகுக்கப்பட்டு, ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் சமூக ஆர்வலருமாகிய ஆரி அர்ஜுனா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக இருந்த ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் தான் ரம்யா பாண்டியன். அதிக அளவில் இவருக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இருப்பினும் வெற்றி பெற முடியாவிட்டாலும் பல கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்று ரம்யா பாண்டியன் இப்பொழுது தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக குடும்பத்தினரை பிரிந்து இருந்த ரம்யா பாண்டியனுக்கு நிகழ்ச்சி முடிந்து விட்டு வரும் பொழுது மிகவும் பயங்கரமான வரவேற்பு கொடுக்கப்பட்டு உள்ளது. மேளதாளங்கள் முழங்க ரம்யாவிற்கு மாலை அணிவித்து கேக் வெட்டி குடும்பத்தினர் அவரை வீட்டுக்குள் வரவேற்கின்றனர், இது குறித்த வீடியோவை ரம்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…