சார்பட்டா நான் நடிக்க வேண்டிய படம் என்று நடிகர் அட்டகத்தி தினேஷ் கூறியுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விர்சனத்தை பெற்று ரசிகர்கள் மட்டுமின்றி, பல சினிமா பிரபலங்கள் படக்குழுவை பாராட்டினார்கள்.
இந்த நிலையில், நடிகர் தினேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சார்பட்டா படம் பற்றி சுவாரசிய விஷயங்களை பேசியுள்ளார். அதில் பேசிய அவர் “அட்டகத்தி படத்திற்கு பிறகு நான்தான் சார்பட்டா பண்ணவேண்டியது. மெட்ராஸ் படத்திற்கு முன்பே அதுக்குத்தான் நாங்க ரெடி ஆனோம். ஆனால் முடியவில்லை எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இயற்கையாகவே அது அமையவில்லை. படம் வெளியான பிறகு நானே பன்னிருக்கலாமேன்னு தோணுச்சி. வருத்தம் எதுவும் இல்லை படம் வெளியானது மிகவும் எனக்கு சந்தோஷம் ” என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…