“சார்பட்டா ஒரு அற்புதம்” – இயக்குனர் அட்லீ பாராட்டு.!

Default Image

சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் அட்லீ தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.  

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். மேலும் கலையரசன், பசுபதி, ஷபீர், ஜான் கோக்கன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான இந்த படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் படம் அருமையாக உள்ளது என்று தங்களது கருத்துக்களை கூறிவருகின்றார்கள். அதைபோல் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறிவருகிறார்கள்.

அந்த வகையில், இயக்குனர் அட்லீ தனது ட்வீட்டர் பக்கத்தில் ” சார்பட்டா பரம்பரை அற்புதமான படம் எனக்கு பிடித்திருந்தது. ஆர்யா படத்திற்காக கடின உழைப்பு. ஒவ்வொரு முறையும் சர்பட்டாவைப் பற்றி ஆர்யா பேசும்போது, இது ஒரு ஊக்கமளிக்கும் படமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். நான் படத்தைப் பார்த்த பிறகு, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். சந்தோஷ் அண்ணாவின் இசை படத்துடன் அழகாக ஓடிக்கொண்டிருந்தது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் மற்றும் ஒவ்வொரு துறையினரும் செய்த கடின உழைப்பு ஒவ்வொரு சட்டகத்திலும் தெரியும். சார்பட்டா பரம்பரை ஆர்யா மனைவி, அம்மா, ரங்கன் வாத்தியார், அப்பா, வேம்புலி, காளி வெங்கட், கலையரசன், மஞ்ச கண்ணன், தங்கதுரி ஆகியோரின் கதாபாத்திரங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை & என் இதயத்தில் பதிந்தவை. முக்கியமாக டான்சிங் ரோஸ் எனக்கு மிகவும் பிடித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்