சார்பட்டா திரைப்படத்தின் அப்டேட் – இயக்குநர் பா.ரஞ்சித் ட்வீட்!
ஆர்யா நடித்துள்ள சார்பட்டாவின் பரம்பரை படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார்.
கபாலி, காலா படத்திற்கு பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை துஷாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது . அதற்காக ஆர்யா தீவிர உடற்பயிற்சி மூலம் உடலை ஃபிட்டாக மாற்றினார். படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியகியுள்ள நிலையில், அதற்கு பிறகு படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது ஆர்யாவின் சல்பேட்டா படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வரும் என்று படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது ஆர்யா ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தின் அப்டேட்காக காத்துள்ளார்கள்.
#Sarpatta update this evening. The match begins… @arya_offl @K9Studioz @officialneelam @pro_guna @urkumaresanpro
— pa.ranjith (@beemji) March 27, 2021