இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடிகை துஷ்ரா விஜயன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில், அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, காலா ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். மேலும், கலையரசன், பசுபதி, அனுபமாகுமார், சஞ்சனா நடராஜன், மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் நடித்தவர்களின் அணைத்து கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் காதல் கதையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். படத்திற்கு நட்சத்திரம் நகர்கிறது என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தை பற்றி கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் நடிகை துஷ்ரா விஜயன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…