தெற்கு தேய்கிறது…. வடக்கு வாழ்கிறது ….கொந்தளிக்கும் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு மத்திய அரசு தென் மாநிலங்களில் இருந்து வரியை வசூலித்து வட மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய அவர், தென் மாநிலங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் வரி செலுத்தி வருவதாகவும், ஆனால் நிதி ஒதுக்கீடு என்பது வட மாநிலங்களுக்கு மட்டுமே செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மக்கள் செலுத்தும் வரியை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி என பிரிப்பதை ஏற்று கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட அவர், ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
ஆந்திர மாநிலம் இந்தியாவில் இல்லையா என கேள்வி எழுப்பிய சந்திரபாபு நாயுடு, ஏன் இவ்வாறு பாகுபாடு காட்டுகிறீர்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.