சூப்பர் ஸ்டார் இடத்தில் ராகவா லாரன்ஸ்.! சந்திரமுகி-2 மாஸ் அப்டேட்.!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. திகில், காமெடி கலந்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

தற்போது 15 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்த படத்தையும் பி.வாசு தான் இயக்க உள்ளார். நாயகனாக சூப்பர் ரஜினிகாந்திற்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்காக தான் வாங்கிய முன்தொகை பணத்திலிருந்து 3 கோடி ரூபாயை கொரோனா நிவாரணத்திற்கு நிதியுதவியாக பிரித்து கொடுத்துள்ளார். இதனை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், 50 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்காகவும், 50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காகவும் அளித்துள்ளார். 50 லட்சத்தை ஃபெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்திற்கும், 50 லட்சத்தை டான்ஸ் சங்கத்திற்கும், 75 லட்சத்தினை தினக்கூலி தொழிலாளர்களுக்கும் அளித்துள்ளார். 25 லட்சத்தினை மாற்றுத்திறனாளிகள் நலனுக்கும் பிரித்து கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்