சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரத்திற்கு பதில் சிம்ரனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா மிக சிறப்பாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்திருந்து.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இந்த படத்தையும் பி.வாசு இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். மீண்டும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
ஆனால், படக்குழு சார்பில் ஜோதிகாவிடம் இன்னும் எந்தவித பேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மாறாக சிம்ரனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சந்திரமுகி முதல் பக்கத்திலேயே சிம்ரனை தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், அவர் அப்போது கர்ப்பமாக இருந்ததன் காரணமாக படத்திலிருந்து விலகினார். அதன் பின்னரே ஜோதிகா படத்தில் இணைந்தார்.
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…