25 வது நாளாக திரையரங்குகளில் வெற்றி நடை போடும் சக்ரா..!!

விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆகியுள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ரெஜினா, கசாண்ட்ரா, ஷ்ரத்தா ரோபோ சங்கர், மனோபாலன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் 3 மொழிகளில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் கடந்துள்ளதால் ட்வீட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025