#பூட்டான் விவகாரம்# பிற நாடுகளுக்கு வாய்ப்பூட்டு! சீனா பகிரங்கம்!

Published by
kavitha

“பூட்டான் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை; எங்களை குற்றம்சாட்ட உரிமை கிடையாது என்று சீனா பகிரங்க  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது”.

இந்திய எல்லைப்பகுதியான லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து,ஜப்பான், ஈராக்,உட்பட உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நாடுகள் அனைத்தும் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு பகிரங்கமாக தங்களது ஆதரவினை தெரிவித்து உள்ளன. இந்தியா மட்டுமில்லாமல் அண்டை நாடுகள் அனைத்துடனும், சீனாவுக்கு எல்லை உட்பட பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி வைத்துள்ளது. இதில்  குறிப்பாக, பூடானை ஆக்கிரமிக்க சீனாத் தொடர்ந்து  தனது மூக்கை அங்கு நுழைக்க முயற்சித்து வருகிறது.

இவ்விவகாரத்தில் தனக்கு சம்பந்தம் இல்லாமல் போல காட்டிவந்த சீனா தற்போது  பூடானுடன் எல்லை பிரச்னை உள்ளதாக சீனா முதல்முறையாக வாய் திறந்து தெரிவித்துள்ளது.

See the source image

இந்நிலையில் இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா – பூடான் இடையேயான எல்லை, இதுவரை, சரியாக வரையறுக்கப்படவில்லை. எனவே பூடானுடன் எல்லை பிரச்னையானது மிக நீண்டகாலமாக உள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண கடந்த 1984 முதல் 2016ம் ஆண்டு வரை, 24 முறை, சீனா-பூடான் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டங்களை  சீனா  தன்வசம் வைத்துள்ளது. மேலும் இந்த விவாகரப் பிரச்னையில் மூன்றாவது  ஒரு நாடு தலையிட தேவையில்லை; மேலும் சீனாவை குற்றம்சாட்டவும் அதற்கு உரிமையில்லை. என்று பகிரங்கமாக உலக நாடுகளுக்கு அறிக்கையில்  மூலமாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்… படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு!

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…

1 hour ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (23/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…

1 hour ago

“அமித்ஷாவிற்கு எதிராக பேச இபிஎஸ் நடுங்குகிறார்”அதிமுக-பாஜக கூட்டணி உறுதி – தயாநிதி மாறன்!

சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…

2 hours ago

Live : நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதல்…அமித்ஷா விவகாரம் வரை!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…

2 hours ago

கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் தறிகெட்டு ஓடிய கார்! 2 பேர் பலி..60 பேர் காயம்!

ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…

3 hours ago

சதம் போச்சு..டென்ஷனாகி ஸ்டெம்பை மிதித்த க்ளாசென்! அபராதம் போட்ட ஐசிசி!

கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…

3 hours ago