அமெரிக்க ராணுவ கமாண்டன்ட் திடீர் எச்சரிக்கை!சீன ராணுவத்தின் வளர்ச்சியை குறைத்து மதிப்பிடக் கூடாது….
அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்திய கமாண்டன்ட் அட்மிரல் ஹாரி ஹாரிஸ் ராணுவ கட்டமைப்புகளை வலுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவில் ராணுவ தளவாடங்களை சீனா குவித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். அடுத்த தலைமுறை ராணுவ தொழில்நுட்பங்களான அதிவேக ஏவுகணைகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அடைவதில் சீனா பெரும் முதலீடு செய்திருப்பதாக குறிப்பிட்ட ஹாரி, இதற்கு இணையான நடவடிக்கைகளை அமெரிக்காவும் மேற்கொள்ளத் தவறினால் எதிர்கால போர்க்களங்களில் சீன ராணுவத்தை எதிர்கொள்ளும் திறன் இருக்காது என எச்சரிக்கை விடுத்தார். சீனாவின் ராணுவ பலம் அதிகரிப்பதால் இந்தோ பசிபிக் நாடுகளில், அமெரிக்காவின் செல்வாக்கு குறையும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.